in , ,

ஜோசப் பரராஜசிங்கத்தை நான் கண்டதே இல்லை – பிள்ளையானின் கருத்து!

நான் ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை கண்டது கிடையாது. ஒருமுறை தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன். அவரை கொலை செய்ததாக வீண்பழியை கூட்டமைப்பினர் சுமத்தினர் என ஜோசப் பரராஜசிங்கம் எம்பி படுகொலை வழக்கிலிருந்து விடுதலையான பிள்ளையான் எம்பி தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ‘மாமனிதர்’ ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும்,

“ஜோசப் பரராஜசிங்கம் 2005ம் ஆண்டு தோல்வியடைந்தார். விடுதலைப்புலிகள் அன்றைய காலத்தில் வெற்றி பெற்றவர்களைக் கொலை செய்துவிட்டு வேறு நபர்களை நியமனம் செய்தனர். அதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். அது தொடர்பாக எவ்வித விசாரணைகளும் செய்யப்படவில்லை.

நாளை தைப்பொங்கல் தினமாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், அந்தவகையில் நீதித் துறையினுடைய எனக்கான அறிவிப்பு வந்துள்ளது. இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் என்னுடைய வழக்கிலிருந்து என்னை முழுதாக விடுவித்து விடுதலை செய்துள்ளது.

என்னை சிறையில் அடைத்து, நசுக்கி முன்னாள் முதலமைச்சராகவும் மாகாணசபை உறுப்பினராகவும் இருந்தபோது இதனைச்செய்தார்கள். 2015ம் ஆண்டு வந்த நல்லாட்சி அரசாங்கம் தங்களோடு நின்றவர்களுக்கு வழங்கிய பரிசாக இதனைச்செய்தார்கள்.

ஜோசப் பரராஜசிங்கம் 2005ல் மரணிக்கும்போது நான் அரசியலில் இருக்கவும் இல்லை. அரசியல் செய்யும் எண்ணமும் இல்லை. அரசியலுக்கான எந்த முயற்சியும் எடுத்தவனும் அல்ல. 2008இல் தான் நான் மாகாண சபையில் போட்டியிட்டேன். அந்த வேளையில்தான் எனது முதலாவது வாக்கினைக்கூட செலுத்தினேன்.

அக்கிரமம் செய்து அரசியலுக்கு வரவேண்டிய தேவைப்பாடு எமக்கு இருக்கவில்லை. ஆனாலும் தமிழ் தேசியவாதிகள் எனபவர்கள் என்னை கிழக்கில் வளரவைத்தால் அவர்களின் அரசியல் அழிந்துவிடும், யாழ்ப்பாணத்தில் இருந்துவந்து இங்கு தேர்தல் கேட்கமுடியாது என நம்பியவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தினை இயற்குவதற்குத் துணையாக நின்ற பிதாமக்கள். அவர்களின் வாரிசுகளாக இருந்தவர்களைக் கொண்டு நல்லாட்சியை உருவாக்கி அவர்கள் ஊடாக என்னை சிறையில் அடைத்தார்கள்.

பல அசிங்கமான செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டது. யாரும் கண்டுகொள்ளவில்லை. இன்று ஊடக தர்மம், சட்டம், பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதிகள் தடுத்துவைக்ககூடாது என்று குரல் கொடுக்கின்றார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை உருவாக்கிய பிதாமக்கள் என்னை மட்டும் தண்டிக்கவேண்டும் மற்றவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று இரட்டை முகத்தினைக் காட்டுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

20 கிலோ ஹெரோயின், பெருமளவு பணம் கைப்பற்றல்!

சபாநாயகர் உட்பட 463 பேருக்கு பிசிஆர் சோதனை!