செய்திகள் பிரதான செய்தி

சஜித் கூட்டணியின் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கோரும் நடவடிக்கை நாளை

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கோரும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான ஆரம்ப கட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பத்திரிகைகளின் விளம்பரங்கள் ஊடாக இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சமூகத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு இம்முறை தமது கட்சியினூடாக வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடும் கட்சிகளுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விமான நிலையத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது-சுனில்

reka sivalingam

ஹொரணை விபத்து; பலர் படுகாயம்!

reka sivalingam

இலங்கைக்கு நன்கொடை வழங்கும் சீனா

reka sivalingam

Leave a Comment