செய்திகள் பிரதான செய்தி

ஞானசார தேரரின் தேசிய பட்டியல் பெரும் சர்ச்சையில்; தேர்தல் ஆணைக்குழு அதிரடி முடிவு!

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரது பெயரை தற்காலிகமாக வர்த்தமானியில் வெளியிடுவதில்லை என தேர்தல் ஆணைக்குழு இன்று (11) முடிவு செய்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளரான வெதிகமய விமலதிஸ்ஸ தேரர் காணாமல்போயுள்ளதாக கூறப்படும் நிலையில் தேசிய பட்டியலை உறுதி செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.

இதேவேளை விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போவதற்கு முன்னதாக தேசிய பட்டியலுக்கு தனது பெயரை பரிந்துரைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் விமலதிஸ்ஸ தேரர் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தற்போது புதிய பொதுச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கட்சி தலைவர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார் என்று அறியமுடிகிறது. இந்த புதிய பொதுச் செயலாளர் கட்சியின் தேசிய பட்டியலுக்கு தலைவர் சமன் பெரேராவையே தெரிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கோப் குழு உள்ளிட்ட கலந்துரையாடல் ஒத்திவைப்பு

reka sivalingam

கல்வியங்காட்டில் காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

reka sivalingam

கோத்தா மீது சர்வதேச அழுத்தங்களை பிரயோகிப்போம்

கதிர்