செய்திகள் பிரதான செய்தி

ஞானசார தேரர் மற்றும் மூவருக்கு அழைப்பாணை

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் மூவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலயக் கேணிப் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறித் தேரர் ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே ஞானசார தேரர் மற்றும் மூவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், ஞானசார தேரர் உள்ளிட்ட 4 பேரையும் நவம்பர் மாதம் 8ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பிலான மனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கதந்தராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

Related posts

தேர்தல் செலவுக்கு மக்களிடம் நிதி கோரும் விக்னேஸ்வரன்

G. Pragas

ஜின் கங்கையின் நீர் மட்டம் உயர்வு

Tharani

பேராசிரியரின் நிதி உதவியில் யாழ் பல்கலை மாணவர்களுக்கு கைபேசிகள்

G. Pragas