செய்திகள் பிரதான செய்தி மன்னார்

டக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை ஆகியோருக்கும் இடையில் இன்று (23) மாலை 5 மணிக்கு மன்னார் ஆயர் இல்லத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் மன்னார் மறை மாவட்டத்தில் தற்போதைய நிலவரம் தொடர்பாகவும் ஆயரிடம் அமைச்சர் கேட்டடு அறிந்து கொண்டார்.

இதன்போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக சுகாதார அமைப்பு தன் கடமையிலிருந்து தவறிவிட்டதா?

Tharani

வடக்கு தொடர்பில் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தல்

Tharani

வீடமைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Tharani