செய்திகள் பிரதான செய்தி மலையகம்

டயகமவில் சிசுவின் சடலம் மீட்பு!

டயகம பொலிஸ் பிரிவு – வேவர்லி தோட்டம் ஆட்லி பிரிவில் ஆண் சிசுவின் சடலம் இன்று (18) மீட்க்கப்பட்டுள்ளது.

ஆட்லி தோட்டத்தில் வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள புற்தரையில் சிசுவை இனந்தெரியாதோர் இன்று வீசிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதி வழியாக சென்ற பிரதேசவாசிகள் சிசுவின் உடலைக் கண்டு, டயகம பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில், உயிரிழந்த குறித்த சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் விரையத்தை கட்டுப்படுத்த புதிய கட்டமைப்பு

Tharani

பயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு

G. Pragas

“இனவாதத்தின் தந்தை” என்பதை நிரூபித்தார் விமல் – வேலுகுமார்

reka sivalingam

Leave a Comment