in , ,

டிப்பர் – கன்ரர் மோதி 12 இராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் காயம்; யாழில் சம்பவம்!

உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 12 இராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனமும் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

இதன்போது டிப்பர் வாகனம் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளது.

சம்பவத்தில் இராணுவ வீரர்கள் 12 பேரும் சிவிலியன்கள் 3 பேரும் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பரில் இருந்த இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் பொலிஸாரும் மேற்கொண்டுவருகின்றனர்.

விபத்தில் சேதமடைந்த இராணுவ வாகனம் பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஈராக் கொரோனா வை.சாலையில் ஒக்சிஜன் சிலிண்டர் வெடித்து 82 பேர் பலி!

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிவித்தல்