செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

டிப்பர் பெட்டி விழுந்து சாரதி பலி!

யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்திப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பர் ஒன்றை பழுது பாா்த்துக் கொண்டிருந்த போது டிப்பரின் சுமை பெட்டி விழுந்ததில் அதன் சாரதி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

திருத்துனர்கள் டிப்பர் பெட்டியினை யக் (தூக்கி) மூலம் உயர்த்தி திருத்திக் கொண்டிருந்த சமயம் டிப்பர் சாரதி அதனை சரிபார்க்க முயன்றபோது யக் விலகியதில் உயர்ந்து நின்ற பெட்டி திடீரென்று விழுந்ததில் பெட்டிக்கு அடியில் சிக்கிய சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மானிப்பாயை சேர்ந்த லிகிந்தன் என்பவரே என தெரியவருகிறது.

Related posts

பங்குனி உத்தரம் இன்று

Tharani

சுற்றுலாத் துறையை மேம்படுத்தல்

Tharani

அரண்மனைக்குள் கொரோனா; ராணி எலிசபெத் அதிர்ச்சி!

Bavan