செய்திகள் பிரதான செய்தி வவுனியா

டிப்பர் மோதி சிறுமி பலி! சாரதி தப்பியோட முயற்சி

வவுனியா – இலுப்பையடிப் பகுதியில் இன்று (06) மாலை வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாயார் சிறு காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டிப்பரின் சாரதி தப்பியோட முற்பட்டபோது அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் துரத்தி பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

Related posts

தத்தழித்த படகுகளை மீட்டது கடற்படை

கதிர்

ஆவணக் காப்பகத்தின் 71வது நிகழ்வு

Tharani

மரம் முறிந்தமையால் போக்குவரத்து பாதிப்பு

Tharani