செய்திகள் பிராதான செய்தி வவுனியா

டெங்கினால் பாடசாலை மூடப்பட்டது

வவுனியா – இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி இன்று (14) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் சில மாணவர்கள் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுகாதாரத் திணைக்களத்தினால் பாடசாலை சூழல் அவதானிக்கப்பட்டதன் அடிப்படையில் பாடசாலையில் டெங்கு நுளம்பு பெருகும் பகுதிகள் சுகாதாரப் பகுதியினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனால் குறித்த சூழலை டெங்கற்ற பிரதேசமாக மாற்ற சுகாதார செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதால் இன்றைய தினம் பாடசாலையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

நானும் தயார் கருவும் அறிவித்தார்

G. Pragas

எக்னெலிகொட கடத்தல் வழக்கில் 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

G. Pragas

தேசிய மட்ட பளுதூக்கல்; செல்வநாயகபுரம் இ.ம.வி மாணவிக்கு தங்கம்!

G. Pragas

Leave a Comment