in , ,

டெல்லியில் மாபெரும் போராட்டம்; பொலிஸார் தாக்குதல் – தேசிய கொடி பிடிங்கி வீசப்பட்டது!

இந்தியா – டெல்லியில் குடியரசு தினமான இன்று (26) விவசாயிகள் மாபெரும் உழவியந்திர போராட்ட பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது 2 இலட்சம் பேர் பங்கேற்று உள்ளதாக கூறப்படும் இந்த மாபெரும் பேரணி செங்கோட்டையை சென்றடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்கள் கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து சிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பேரணியை பொலிஸார் திடீரென தடுத்ததால், சலசலப்பு ஏற்பட கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதுடன் தடியடிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து முன்னேறிய விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அத்துடன் செங்கோட்டையில் ஏறி இந்திய கொடியை அகற்றி விவசாயிகள் கொடியை நாட்டியுள்ளனர். அங்கு அதிகமானோர் முற்றுகையிட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை தாக்குதலின் போது உழவியந்திரம் கவிழ்ந்து விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார். எனினும் பொலிஸார் சுட்டு கொன்றதாக குற்றம்சாட்டப்படுள்ளது. சம்பவத்தில் பொலிஸார் சிலரும் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் இந்த போராட்டம் காரணமாக டெல்லியின் பல பகுதிகளில் இணைய வசதிகள் முடக்கப்பட்டுள்ளது.

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஹட்டனில் போராட்டம்!

வவுனியாவில் கொரோனா தொற்று 301