சுற்றுலா இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியை பார்வையிடுவதற்காக காலி கோட்டைக்கு சென்றிருந்த ஆங்கில கிரிக்கெட் வீரர் ரொப் லூயிஸ் பொலிஸாரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து தொடரை பார்வையிட மார்ச் மாதம் இலங்கைக்கு வந்த குறித்த ரசிகர் கொரோனா நிலைமை காரணமாக நாட்டை விட்டு செல்லாமல் 10 மாதங்களாக இந்த தொடரை காண காத்திருந்துள்ளார்.
அங்கிருந்து போட்டியை காண அனுமதிக்க இயலாது என்று தெரிவித்தே அவரை பொலிஸார் வெளியேற்றினர்.
காலி ஆடுகளத்தின் வாயில் மூடப்பட்டு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாதே போட்டிகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.