செய்திகள் பிரதான செய்தி

டெஸ்போட் தோட்டத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

நுவரெலியா – நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போட் தோட்டத்தில் கடந்த 16ம் திகதி எபொட்ஸ்போட் பாடசாலைக்கு சென்ற குணசேகரன் சிவன்ராஜ் (14) என்ற மாணவன் வீடு திரும்பவில்லை என்று நானுஓயா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இச்சிறுவனை நானுஓயா பொலிஸாரும் தோட்ட மக்களும் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை கடும் காற்றுடன் கூடிய காலநிலை காணப்பட்டது. இன்று காலை விறகு சேகரிக்க சென்ற நபர் ஒருவர் மக்கள் நடமாட்டமில்லாத மூங்கில் காட்டில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்றை கண்டு அதிர்சியடைந்து உடனடியாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் நானுஓயா பொலிஸ் நிலையத்திற்கும் அறிவிக்கப்பட்டது. சிறுவனின் பெற்றோர் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம் தங்களது மகன் என அடையாளம் கண்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உடைந்துள்ள இறங்கு துறை; பயணிகள் அசெளகரியம்

Tharani

வெள்ளைப் பூண்டு விலை அதிகரிப்பு!

reka sivalingam

வடபகுதியின் இன்றைய கொரோனா நிலவரம்!

Bavan