செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

தகாத செயல் நடந்த வீடு முற்றுகை; மூவர் தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் தகாத நடவடிக்கை இடம்பெறுவதாக கிடைத்த தகவலின்படி இன்று (25) இரவு வீடு ஒன்றை சுற்றி வளைத்த பொலிஸார் அங்கிருந்தவர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளர்.

பின்னர் அங்கிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் அந்த வீட்டிலேயே தனிமைப்படுத்த பொலிஸார் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள்  நடவடிக்கை எடுத்தனர்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே அண்மைக்காலமாக தகாத நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில் அயலவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டை இன்று இரவு 7.45 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் வீட்டில் விடுதி வைத்திருந்த நபரையும் விசாரணைக்கு உட்படுத்தினர். இதன்போது அங்கிருந்தவர்கள் முன்னுக்கு பின் முராண தகவல்களை வழங்கியுள்ளனர்.

இதனால் இன்றைய தினம் பெண்கள் உட்பட மூவரையும் குறித்த வீட்டிலையே தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் அவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

தேர்தல் சட்ட மீறல்; இதுவரை 11 பேர் கைது

G. Pragas

மின் கம்பத்தில் மோ.சைக்கிள் மோதி ஒருவர் பலி; திருமலையில் சம்பவம்!

Tharani

கருணாவை கைது செய்ய காேரிய மனு மீதான விசாரணை செப்டம்பரில்

Tharani