ஏனையவைசெய்திகள்தடயத்தை தேடி!

தடயத்தை தேடி! கொலை எண்: 01 (பெட்டிக்குள் சிறுவன்)

கொலை எண் : 01

பெட்டிக்குள் சிறுவன்

பிலடெல்பியாவின் காட்டில் 1957 பெப்ரவரியில் ஒரு சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பழைய பெட்டி ஒன்றுக்குள் சிதைக்கப்பட்டு போடப்பட்டிருந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவ்வழியால் சென்ற ஒரு கல்லூரி மாணவனாலேயே இந்த கொலை சம்பவம் கண்டறியப்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த மர்மக் கொலையின் முடிச்சுக்களை அவிழ்க்க விசாரணைகளும் ஆரம்பமானது.

ஆனால் பொலிஸாரினால் யாருடைய சாட்சியத்தையும் சரியாகப் பெற்றுக் கொள்ள முடியவில்லை, காரணம் கொலையுண்ட சிறுவன் பெட்டிக்குள் சிதைக்கப்பட்டிருந்தமை. இதனால் அவனை அடையாளம் காண முடியவில்லை. தாெடர்ந்தும் தடயங்களை தேட தொடங்கியது பொலிஸில்.

இந்த வழக்கில் மார்த்தா என்ற ஒரு பெண்ணை விசாரணைக்கு உட்படுத்தினர் பொலிஸார். விசாரணையின் போது, மார்த்தா கொலையுண்ட சிறுவனின் தாய் எனவும் அவர் அந்த சிறுவனை இன்னொரு பெண்ணுக்கு விற்றதாகவும் குறிப்பிட்டார். மேலும் அந்தப் பெண் தவறானவர், கொடூரமானவர் எனவும் தனது மகனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் எனவும் தகவல் வழங்கினார். அத்தோடு அந்தப் பெண் தான் தனது மகனை அடித்துக் கொன்றதாகவும் கூறினார்.

இந்த வழக்கிலே மார்த்தா மீது பொலிஸ் கவனம் செலுத்தியதற்கு காரணமாக அமைந்த விடயங்களாக அமைந்தது அவர் கூறிய சில விடயங்களாகும்.

  1. சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டதற்கு முன் அவன் சுட்ட பீன்ஸ் சாப்பிட்டான் என்று கூறியமை. (பிரேத பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டது).
  2. கொல்லப்படுவதற்கு முன் அவன் குளித்திருந்தான் என்று கூறியமை (தண்ணீரில் சுத்திகரிக்கப்பட்ட விரல்கள் எச்சங்களில் கண்டுபிடிக்கப்பட்டமை).

ஆனாலும் இந்த வழக்கில் மார்த்தா மனநலம் குன்றியவர் என்பதால் அவருடைய சாட்சியங்கள் நிராகரிக்கப்பட்டன. அத்தோடு கொலையுண்ட சிறுவனின் முகமும் அடையாளம் காணப்படாமலே இருந்தது.

அதனால் இந்த கொலைக்கான காரணம் என்ன? யார் கொலயுண்டது, யார் கொலை செய்தது? என்ற அடைப்படைக் கேள்விகளுக்கும் விடை கிடைக்காமலே போனது.

கடைசியில் சிறுவனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த மார்த்தாவின் வீட்டை சந்தேகப்பட்டார் புலனாய்வுப் பிரிவில் வேலை செய்யும் பணியாளரான ரெமிங்டன் பிரிஸ்டோவ்.

அவர் கண்டறிந்த விடயங்கள்,

  1. சிறுவனைக் கொலை செய்து வைத்த பெட்டியில் பூசப்பட்டிருந்த அதே பெயிண்ட் அந்த வீட்டு தளபாடங்களிலும் பூசப்பட்டிருந்தமை.
  2. சிறுவனின் உடலில் சுற்றப்பட்டிருந்த போர்வையை ஒத்த போர்வைகள் அந்த வீட்டில் கிடந்தமை.

ஆனாலும் வளர்ப்புப் பெற்றோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாததால் அந்த கண்டுபிடிப்புகளும் நிராகரிக்கப்பட்டது.

Original police poster of the Boy in the Box
Photo Credit: wikimedia commons

விடை அறியப்படாமலே இருக்கின்ற இந்த வழக்கிலே மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை விடயங்களை வைத்து சிந்திக்கும் போது அனைவருக்கும் இந்த வழக்கைப் பற்றிய ஆர்வமும், ஆவலும் இன்னும் அதிகரித்திருக்கும்.

இந்த சம்பவம் இடம்பெற்று 62 ஆண்டுகளுக்குப் பிறகு வளர்ச்சியடைந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மார்த்தாவின் மகனாக அந்த சிறுவன் இருக்கலாம் என்று கூறி வழக்கு முடிக்கப்பட்டது. (முக புனரமைப்பு தொழில்நுட்பம், டி.என்.ஏ க்களை வைத்து).

ஆனாலும் உரிமை கோர முடியவில்லை.

அப்படியென்றால் இந்த விடை தீரா வழக்கில் இப்படித்தான் நடந்திருக்குமா?

  • சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பெண்ணைப் பற்றிய எந்த தகவல்களும் கிடைக்காததால் அவர் மேல் நிறைய பேருடைய பார்வை சென்றிருக்கும். மார்த்தா மனநலம் குன்றியவராதலால் அவரிடமிருந்தும் அவளைப் பற்றிய எந்த தகவல்களையும் பெற முடியவில்லை.
  • ஆகவே கொலை நடந்த நாளன்று சிறுவன் குளித்துவிட்டு வந்துள்ளான். இரவு நேரம் சிறுவன், மார்த்தா, அந்தப் பெண் மூவரும் சேர்ந்திருந்து சுட்ட பீன்ஸ் சாப்பிட்டுள்ளார்கள். அதன் பின்னர் அவள் அந்த சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சிக்கும் போது சிறுவன் கடுமையாக மறுத்து அவரை தாக்க முயற்சித்ததால் கோபமடைந்த குறித்த பெண் அவனை அடித்துக் கொலை செய்திருக்கலாம்.
  • பின்னர் என்ன செய்வதென்று யோசித்து விட்டு அங்கிருந்த ஒரு பழைய பெட்டியை எடுத்திருக்கலாம். பெட்டி சிறிதாக இருந்ததால் அவனை துண்டங்களாக வெட்டி அங்கிருந்த போர்வைக்குள் போட்டு பெட்டிக்குள் வைத்து கொண்டு போய் அந்தக் காட்டுப்பகுதியில் போட்டிருக்கலாம். பின்னர் அந்த ஊரை விட்டு எங்காவது ஓடியிருக்கலாம்.

இந்த வழக்கானது உண்மையிலேயே பிலடெல்பியாவில் இடம்பெற்ற ஒரு கொலை வழக்கான the boy in the box ஐ தழுவியதாக கொஞ்சம் மாற்றங்களுடன் தமிழ் மக்களுக்கு வாசிக்கக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்டது.

– பவன் –

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266