ஏனையவைசெய்திகள்தடயத்தை தேடி!

தடயத்தை தேடி! கொலை எண்: 02 (ஐஸ்பெட்டிக்குள் மனித தலைகள்)

கொலை எண்: 02

ஐஸ்பெட்டிக்குள் மனித தலைகள்

1965 ஆம் ஆண்டில், ப்ரெட் மற்றும் எட்வினா ரோஜர்ஸ் ஆகிய அழகிய முதிய தம்பதிகள் மிகவும் அமைதியான சூழலில் தமது கடைசி வாழ்க்கைக் காலத்தைக் கழிக்க எண்ணி ஹீஸ்டன் நகரில் பெரிய வீடொன்றைக் கட்டி வசித்து வந்தனர்.

அந்தக் குடும்பம் பெரும்பாலும் அமைதியான சுற்றுப்புறத்தில் எப்பொழுதும் தங்களைத் தாங்களே வைத்திருந்தது எனலாம்,ஆனாலும் அந்தப் பெரிய வீடானது இந்த இரண்டு பேருக்கும் போதுமான அளவை விட பெரிதாக இருந்ததால் சார்லஸ் எனும் பையன் ஒருவனுக்கு அந்த வீட்டின் மேல்மாடியை வாடகைக்கு விட்டிருந்தனர்.

குறிப்பாக சார்லஸின் தனிமையான போக்கு மற்றும் சமூக விரோத நடத்தைகள் காரணமாக அப்படியொருவன் தங்கியிருக்கிறான் என்பதையே அயலவர்கள் பலரும் அறிந்திருக்கவில்லை . ஏனென்றால் சார்லஸ் ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் வீட்டை விட்டு வெளியேறினால், இரவு நேரத்திற்குப் பிறகு திரும்பி வருவதையே வாடிக்கையாக கொண்டவன்.

சார்லஸை வாடகைக்கு அமர்த்தி ஒரு சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், ப்ரெட் மற்றும் எட்வினா தம்பதிகளுடைய அயலவர் ஒருவர் இவர்களுடைய வீடு தொடர்ந்து பூட்டிக் கிடப்பதை அவதானித்தார். இதனால் சந்தேகமடைந்த அந்த அயலவர் பொலிஸுக்கு அறிவித்தார். அறிவித்த சில நிமிடங்களிலேயே பொலிஸார் பிரெட் மற்றும் எட்வினாவை வீட்டை வந்தடைந்தனர். எவ்வளவோ அழைத்துப் பார்த்தும் வீட்டுக் கதவை யாரும் திறக்காததால் வீட்டின் கதவை அடித்துத் திறந்து உட்புகுந்தனர்.அங்கே எவ்வளவு தேடியும் ப்ரெட், எட்வினா, சார்லஸைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியில் பொலிஸார் குளிர்சாதன பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அங்கே ஏராளமான இறைச்சிப் பொதிகளுக்கு நடுவில் இரு தலைகள் இருப்பதைக் கவனித்தனர்.ஆம் ப்ரெட் மற்றும் எட்வினா ரோஜர்ஸ் தம்பதியே அவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தனர்.அவர்களது மீதி உடல் பாகங்கள் குளிர்சாதனப் பெட்டியின் காய்கறித் தொகுதியில் இருந்தமையானது கொலையாளி பற்றிய கோபத்தை பொலிஸுக்கு இன்னும் அதிகரித்தது எனலாம்.இதனால் தேடுதல் நடவடிக்கைகளும் மும்முரமாக ஆரம்பமானது.

இங்கு கொலைக் குறிப்புகளாக,

  1. ப்ரெட் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததுடன் அவரது கண்கள் வெளியேற்றப்பட்டு பிறப்புறுப்பும் அகற்றப்பட்டிருந்தது.
  2. கிடைக்கப் பெற்ற கைரேகை ஆதாரங்கள் அனைத்தும் சார்லஸே குற்றவாளி என்பதற்கு அடித்தளமாய் அமைந்தது.
  3. இன்னொரு முக்கிய ஆதாரமாக இங்கு கிடைக்கப் பெற்ற ஒரு விடயமாக, குளிர்சாதனப் பெட்டியில் கிடைக்கப் பெற்ற எச்சங்களில் மேலதிகமாக

இன்னொரு வெட்டப்பட்ட கையும் கிடந்தமை (விசாரணைகளின் பின் அந்த வெட்டப்பட்ட கை சார்லஸினுடையது எனும் அதிர்ச்சித் தகவலும் வெளியானது).

  1. ஆனாலும் சார்லஸைக் கண்டுபிடிக்க முடியவில்லை
  2. அந்த வீட்டில் கிடந்த முழு நகைகள்,பணங்கள் போன்றனவும் திருடு போயிருந்தமை.

ஆகையால் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை வைத்து இந்த கொலையை செய்தது சார்லஸ்தான் என்று வழக்கை முடித்தது பொலிஸ். ஆனாலும் இந்த வழக்கைப் படிக்கும் போது அனைவருக்கும் சார்லஸ்தான் கொலையாளியா என்பதில் சந்தேகங்கள் வருவது சாத்தியமே. ஏனெனில் சார்லஸின் வெட்டப்பட்ட கை கிடந்தமை அனைவருக்கும் ஒரு வியப்பை ஆழ்த்தியிருக்கும்.

பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கை

ஆம் நிறைய மாதங்களுக்குப் பிறகு ஒரு திருப்பம் உண்டானது. அது என்னவென்றால், சார்லஸ் கொலை செய்யப்பட்டு அவரது பிணம் அயலவர் வீட்டு வளவுக்குள் புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அந்த அயலவர் வேறு யாருமில்லை நிறைய நாளாக வீடு பூட்டிக் கிடக்கின்றது என்று பொலிஸுக்கு தகவல் வழங்கிய அதே அயலவர் தான். இப்பொழுது வழக்கில் திருப்புமுனை உண்டாகி புதிய குற்றவாளி பிடிபடுகிறான்.

அப்படியென்றால் இந்த வழக்கில் இதுதான் நடந்ததா?

  1. சார்லஸ் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அயலவர் உள்நுழைந்து பணத்துக்காகவும் நகைக்காகவும் அந்த முதிய தம்பதியைக் கொன்றிருக்கலாம்.அந்தநேரம் பார்த்து சார்லஸ் திரும்பி வந்திருக்கலாம்.அதனால் சார்லஸையும் கொல்ல வேண்டிய சூழ்நிலை அந்த அயலவருக்கு ஏற்பட்டிருக்கலாம்
  2. தன்னுடைய கைரேகை பிடிபடாமல் இருக்க சார்லஸினுடைய ஒரு கையை அகற்றி அதனை பதிய வைக்க பயன்படுத்தியிருக்கலாம்.பின்னர் சார்லஸின் உடலை யாருக்கும் தெரியாமல கொண்டு போய் தனது வீட்டிற்கு பின்புறத்தில் புதைத்திருக்கலாம்.பின்னர் ப்ரெட் மற்றும் எட்வினா தம்பதியினுடைய வீட்டை வெளியில் பூட்டி விட்டு தானே சந்தேகிப்பது போல் நடித்து பொலிஸுக்கு அறிவித்திருக்கலாம்.
  3. சார்லஸை வைத்து தான் தப்பிக்க நினைத்துள்ளான் அயலவன் எனும் ஆசாமி.

இந்த வழக்கானது the ice box murders எனும் கொலை வழக்கின் உண்மைப் பின்னணியை மையமாக வைத்து தமிழ் மக்களுக்கு வாசிக்கக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்டது.

– பவன் –

தடயத்தை தேடி! கொலை எண்: 01 ஐ வாசிக்க விரும்பினால் கீழே உள்ள லிங்கை அழுத்தி வாசியுங்கள்…

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266