ஏனையவைசெய்திகள்தடயத்தை தேடி!

தடயத்தை தேடி! கொலை எண்: 04 (மூன்று அப்பாவிச் சிறுமிகள்)

கொலை எண்: 04

மூன்று அப்பாவிச் சிறுமிகள்

1977 களில், ஓக்லஹோமா சாரணர் முகாமுக்கு சாரணர் பயிற்சிக்காக மூன்று இளம் பெண் சாரணர்களான லோரி, மைக்கேல், டோரிஸ் தங்கள் பயிற்சியாளருடன் சென்றிருந்தார்கள்.

மூவரும் எட்டு முதல் பத்து வயதுடைய சிறுமிகள் மிகவும் துடிப்பாகவும் எதிலுமே எதையாவது அறிய வேண்டும் என்று நினைக்கின்ற அந்த மூன்று பெண்களுக்கும் பயங்கரக் கதைகள் என்றால் அவ்வளவு உயிர். இரவு வேளைகளில் காம்ப் பயரை (campfire) சுற்றியிருந்து பயிற்சியாளர் டேவிட் கூறும் மர்மக்கதைகளை கேட்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இப்படியே சென்று கொண்டிருக்கும் போது அவர்களது முகாமிடலின் எட்டாவது நாள் இரவு, இவர்கள் மூவரும் டேவிட்டுக்குத் தெரியாமல் இரவை ரசிக்க வெளியில் சென்றார்கள்.ஆனாலும் விடிந்தும் அவர்கள் திரும்பி வரவில்லை.

ஓஹ்லகோமா முகாம் (ohlakoma camp)

அடுத்தநாள் காலையில் தெரிய வந்த உண்மை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.மூன்று பெண்களும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். சிறுமிகளின் உடல்கள் முகாமுக்கு அப்பால் இருந்த பாதையில் போடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த பொலிஸாரினால் பிரதான சந்தேகநபராக ஜீன் லெராய் ஹார்ட் என்பவர் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் அந்த சாரணர் முகாமுக்கு சற்று தொலைவில் வசிப்பவர் என்றும் அவர் கொள்ளை,கடத்தல் மற்றும் கற்பழிப்பு போன்ற வழக்குகளுக்காக ஏற்கனவே சிறைச்சாலையில் இருந்தவர் என்பதும் பொலிஸாரால் கண்டறியப்பட்டது.ஆகவே எந்தவித சந்தேகமுமின்றி ஜீன் லெராய் ஹார்ட் தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதனை சான்று கூறும் மேலதிக விடயங்களாக

  1. கொலை நடைபெற்ற இடத்தில் ஒரு சிவப்பு விளக்கு மற்றும் இரத்தக் களரியும் ஆதாரங்களாகப் பெறப்பட்டிருந்தது. அதனை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸாரால் அந்த சிவப்பு விளக்கு குற்றவாளியின் வீட்டுடையதுதான் என்பதையும் கண்டுபிடித்திருந்தனர்.
  2. மேலும் ஆதாரமாக பெறப்பட்டிருந்த இரத்தக் களரியை பின்தொடரும் போது அது குறித்த குற்றவாளியின் வீட்டின் பின்னால் சென்று முடிவடைந்திருந்தது. அங்கே தேடிய போது ஒரு இரும்புக்கம்பி,கத்தி போன்றன அந்தக் குற்றவாளியின் வீட்டுக் கிணற்றுக்குள் கிடந்துள்ளது.
    இதனால் எந்த மறு விசாரணைகளும் இன்றி ஜீன் லெராய் ஹார்ட் தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டது.

ஆனால் உண்மை நிலவரப்படி கொலை நடந்த அன்று ஜீன் லெராய் ஹார்ட் வெளியூருக்குச் சென்றிருந்த நிலையில் அடுத்தநாள் தான் திரும்பி வந்துள்ளார். அப்படியாயின் உண்மையில் இந்தக் கொலையை அவர் செய்யவில்லையா? ஆதாரங்கள் அவர்தான் குற்றவாளி என்று நிரூபிப்பதால் இதனை சாதகமாகப் பயன்படுத்திய பொலிஸ் இந்த வழக்கை முடித்திருக்கிறதா? அப்படியாயின் யார்தான் குற்றவாளி?

அந்த மூன்று சிறுமிகள் (that three girls)

அப்படியாயின் என்னதான் இந்த வழக்கில் நடந்திருக்கும்?

  1. இந்த வழக்கை வாசிக்கும் போதே அனைவருக்கும் ஜீன் லெராய் ஹார்டை வேண்டுமென்றே யாரோ மாட்டவைத்து தான் அந்த வழக்கிலிருந்து தப்பியுள்ளான் என்பது புலனாகும்.
  2. ஆகவே இந்த வழக்கின் கணிப்பின்படி சந்தேகம் டேவிட் மேல் செல்கிறது. அந்த மூன்று சிறுமிகளின் பயிற்சியாளரான டேவிட் அந்தப் பெண்களுக்கு மர்மக் கதைகளைச் சொல்லும் வாடிக்கை உடையவன்.ஆதலால் அவன் இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தியிருக்கலாம்.
  3. தனது கதைகளின் மூலம் ஒரு ஆர்வத்தை உண்டாக்கி அவர்களை இரவு நேரம் வெளியில் செல்ல வைத்திருக்கிறான்.அவர்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி கொலை செய்திருக்கிறான்.
  4. ஜீன் லெராய் ஹார்ட் ஒரு குற்றவாளி என்பதைப் பற்றி டேவிட் முன்னமே அறிந்து வைத்திருந்ததால் அவனை பகடைக்காயாகப் பயன்படுத்தி தான் தப்பித்துக் கொள்வதற்காகத்தான் அந்த இடத்தில் முகாம் இட திட்டமிட்டிருக்கலாம்.
  5. அவன் வெளியூர் சென்றதை சாதகமாகப் பயன்படுத்தி முதலேயே அவன் வீட்டில் சென்று கம்பி,கத்தி போன்றவற்றை எடுத்திருக்கலாம்.அத்தோடு அவன் வீட்டிலிருந்த சிவப்பு விளக்கு ஒன்றையும் எடுத்து வைத்திருந்திருக்கலாம் .
  6. அந்தப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கைக்கு கையுறை போட்டு குறித்த உபகரணங்களால் கொன்றுவிட்டு சிவப்பு விளக்கை அங்கேயே போட்டுவிட்டு இரத்தக்கறை சொட்டச்சொட்ட உபகரணங்களை கொண்டு போய் ஜீன் லெராய் ஹார்ட் வீட்டுக் கிணற்றுக்குள் போட்டு தான் தப்பித்திருக்கலாம்.(கைரேகை பிடிபடாமல் இருக்க நீருக்குள் அனைத்தையும் போட்டிருக்கலாம்)

இப்பொழுது யார் உண்மைக் குற்றவாளி என்பது அனைவருக்கும் தெளிவாயிருக்கும்.

இந்த கொலை வழக்கானது the girl scout murders என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மக்களுக்கு வாசிக்கக் கூடிய வகையில் மாற்றியமைக்கப் பட்டது.

– பவன் –

தடயத்தை தேடி! பகுதியின் முதல் மூன்று மர்ம வழக்குகளையும் வாசிக்க விரும்பினால் கீழே உள்ள லிங்கை அழுத்தி வாசியுங்கள்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266