ஏனையவைசெய்திகள்தடயத்தை தேடி!

தடயத்தை தேடி! கொலை எண்: 05 (நரமாமிசப் பிரியன்)

கொலை எண்: 05

நரமாமிசப் பிரியன்

1986ம் ஆண்டில் சாகாவா எனும் ஜப்பானியன் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். உள்ளூர் பிரபலமாக இருந்த அவன் மிருகத்தனமான செயல்களைச் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டவன். இவன் மீது மூன்று மர்மக் கொலைகள் செய்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால் பொலிஸிடம் போதிய ஆதாரங்கள் இல்லாமை மற்றும் ஜப்பானிய மனநல நிறுவனமொன்று இவனை மனநல நோயாளி என்று பரிந்துரை செய்யவே இவன் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை அடைகிறான்.

அப்படி இவன் செய்த மர்மக் கொலைகள் தான் என்ன?

  1. தனது 23ஆவது வயதில், தனது அண்டைய குடியிருப்புகளில் ஒரு பெண்ணை வீட்டுக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்றமை.
  2. இலக்கியத்துறையில் பி.எச்.டி முடிப்பதற்காக பிரான்ஸ் சென்றிருந்த வேளை தனது பெண் சகாவான ரெனீ ஹார்ட்வெல்ட்டைக் கொன்றமை.
  3. பல வருடங்கள் கழித்து வேலை செய்யும் போர்வையில் 25 வயதான டச்சு பெண்ணைத் தன் குடியிருப்பில் வைத்துக் கவர்ந்து கொன்றமை. இந்த டச்சுப் பெண் கொலை வழக்கிலேயே இவனைப் பொலிஸாரால் குற்றவாளி என்று அடையாளம் கண்டு கைது செய்ய முடிந்தது. முதல் இரண்டு வழக்குகளுக்கும் எந்த ஆதாரத்தையும் பொலிஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. கொலையுற்ற நபர்களின் உடல்களைக் கூட அவர்களால் அடை யாளம் காணப்படவில்லை. டச்சுப் பெண்ணைக் கொன்ற வழக்கிலே இவன் பிடிபடுவதற்குக் காரணமாக அமைந்த விடயம், இவன் அந்தப் பெண்ணை துண்டங்களாக வெட்டி இரண்டு சூட்கேஸுகள் நிறைய அதை நிரப்பி ஒரு ஏரியில் கொட்டும் போது தொலைவிலிருந்து பார்த்த ஒருவனின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவன் குற்றவாளி ஆக்கப்பாட்டான். ஆனாலும் முதல் குறிப்பிட்டபடி இவன் ஒரு மனநல நோயாளி என்பதால் குறுகிய தண்டனைகளோடு விடுவிக்கப்பட்டான்.

இந்த வழக்கானது இஸ்ஸெய் சகவா என்ற உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த வழக்கிலே முதல் இரண்டு கொலைகளுக்கும் ஆதாரம் கிடைக்காமைக்கான காரணமாக சொல்லப்பட்ட காரணமானது அனைவருக்கும் ஆச்சரியமும் , அதிர்ச்சியுமூட்டக் கூடியதாக இருக்கும்.

அது என்னவென்றால், சாகாவா ஒரு நரமாமிசம் சாப்பிடும் கொடூரமானவன் என்பது பின்நாட்களில் கண்டறியப்பட்டது. ஆம் , அவன் மனித மாமிசம் சாப்பிடுவதில் அலாதிப்பிரியமுள்ள ஒரு மனநல நோயாளி ஆவான்.

அப்படியென்றால் முதல் இரண்டு கொலைகளில் நடந்தது என்ன?

  • கொல்லப்பட்டவர்கள் உண்ணப்பட்டுள்ளனரா?. ஆம் அவர்களை துண்டங்களாக வெட்டி ருசி பார்த்துள்ளான் அந்த கொடூரன். மீதி துண்டங்களை ஏரியில் போட்டு தடயங்களையே அழித்துள்ளான்.
  • ஆனால் மூன்றாவது தடவை கையும் களவுமாக பிடிபட்டுள்ளான்.

இந்த வழக்கானது இஸ்ஸெய் சகவா எனும் நரமாமிச மனிதனின் உண்மைக் கொலைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்களுக்கு வாசிக்கக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்டது.

– பவன் –

தடயத்தைத் தேடி! பகுதியின் முன்னைய மர்ம கொலை வழக்குகளை வாசிக்க விரும்பினால் கீழுள்ள லிங்கை அழுத்தி வாசியுங்கள்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266