செய்திகள் பிராதான செய்தி

தடயவியல் கணக்காய்வு அறிக்கை அடுத்த வாரத்தில்…!

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் திறைசேரிமுறி தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வின் அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டிருந்ததுடன், சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த அறிக்கையை பெற்றுக்கொடுக்காதிருக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (13) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தடயவியல் கணக்காய்வு அறிக்கையை விரைவில் தமக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (14) சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவை நாடாளுமன்றத்தில் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கும் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் தனது முடிவை அறிவிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Related posts

விசர்நாய்க் கடி கட்டுப்பாடு: 05 கோடி ஒதுக்கீடு!

Tharani

வெள்ள நீர்த் தேக்கத்திற்கு தீர்வு வழங்க நகர சபை உறுப்பினர்கள் கோரிக்கை

G. Pragas

அதிபர் வெற்றிடத்தை நிரப்ப கோரி போராட்டம்!

G. Pragas

Leave a Comment