in ,

தடுமாற்றத்தில் இருந்து மீண்டெழுந்து ஆஸியின் வெற்றியை தடுத்தது இந்தியா!

சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

407 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இன்றைய இறுதி நாள் ஆட்ட நேர நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பாக ரிஷப பாண்ட் 97 ஓட்டங்களையும் சிட்டேஸ்வர் புஜாரா 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஹெசல்வுட் மற்றும் நதன் லயன் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

போட்டிச் சுருக்கம்,

முதலாவது இன்னிங்ஸ் – அவுஸ்திரேலியா 338

முதலாவது இன்னிங்ஸ் – இந்தியா 244

இரண்டாவது இன்னிங்ஸ் – அவுஸ்திரேலியா 312/6 (இ.நி)

இந்த சமப்படுத்தல் மூலம் நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் காணப்படுகிறது.

கயந்த எம்பியின் பிசிஆர் முடிவு வெளியானது!

நினைவு தூபி இடிப்பு; முடங்கியது வவுனியா!