in , ,

தண்ணிமுறிப்பில் மின்னல் தாக்கி விவசாயிகள் மூவர் பலி!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதி வயலில் இன்று (15) மின்னல் தாக்கியதில் விவசாயிகள் மூவர் உயிரிழ்துள்ளனர்.

‘குமுழமுனைக் கிராமத்தினைச் சேர்ந்த இருவர், வற்றாப்பளைக் கிராமத்தினைச் சேர்ந்தவர் உட்பட விவசாயிகள் மூவர் தண்ணிமுறிப்பு 3ம் கண்டம் பகுதியில் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

இரவாகியும் அவர்கள் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவர்களைத் தேடிச் சென்றபோது அவர்கள் மூவரும் சடலமாக காணப்பட்டிருக்கின்றனர்.’ என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றிருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றது.

சடலங்கள் வயலில் காணப்பட்ட காவல் கொட்டிலில் காணப்படுவதாகவும், பொலிஸாருக்கு அறிவித்துள்ள போதிலும் அவர்கள் நாளை காலையே அங்கு விசாரணைக்கு செல்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குமுழமுனை மேற்கு 7ம் வட்டாரத்தினை சேர்ந்த கணபதிப்பிள்ளை மயூரன் (36-வயது), குமுழமுனை கிழக்கினை சேர்ந்த சிவசிதம்பரம் யுகந்தன் (30-வயது), வற்றாப்பளை கிராமத்தினை சேர்ந்த யோகலிங்கம் சுஜீவகரன் (42-வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளார்கள்.

Short English reference about this news:-

Three farmers killed in Thannimurippu – Mullaitivu, when lightning strike at farmland, today evening.

கல்வயல் பெண் கொரோனாவுக்கு பலி!

டெல்லியை பந்தாடியது ராஜஸ்தான் – கிரிஸ் மொறிஸ் சிறப்பாட்டம்!