in

தண்ணீர் கொடுப்பனவை செலுத்த நடமாடும் சேவை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஏற்பாடு!

தண்ணீர் கொடுப்பனவை செலுத்த நடமாடும் சேவை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஏற்பாடு!

நாட்டில் நிலவுகின்ற கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு நெடுங்கேணி, ஓட்டுசுட்டான், பாண்டியன்குளம் மற்றும் மல்லாவி நீர் வழங்கல் திட்ட பயனாளிகளுக்கான மாதாந்த நீர்ப்பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் நீர்ப் பட்டியல் நிலுவைகளை இலகுவில் செலுத்துவதற்கான நடமாடும் சேவையானது இன்று திங்கட்கிழமையும் நாளை செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை ஒழுங்கமைத்துள்ளது.
இன்று திங்கட்கிழமை முற்பகல் 9 மணி தொடக்கம் 12.30 மணிவரை நெடுங்கேணி பகுதியிலும் மதியம் ஒரு மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை ஓட்டுசுட்டான் பகுதியிலும் நடைபெறும்.நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 9 மணி தொடக்கம் மதியம் 12.30 மணிவரை பாண்டியன்குளம் பகுதியிலும் மதியம் ஒரு மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை மல்லாவி பகுதியிலும் இடம்பெறும்.

அனைவரும் தங்களது மாதாந்த நீர்ப்பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் நீர்ப் பட்டியல் நிலுவைகளை தங்கள் பகுதி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்துக்கு வருகைதந்தோ அல்லது எமது உத்தியோகத்தர்களுக்கு அழைப்பை மேற்கொள்வதன்மூலம் பொருத்தமான வழிமுறைகளினூடாகவோ மேற்கொள்ளமுடியும்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஸ்மார்ட் சோன் மூலமான https://ebis.waterboard.lk/smartzone/Tamil/OnlinePayments என்ற ஒன்லைன் மூலமாகவும் தங்களது கொடுப்பனவுகளை இலகுவில் மேற்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயானக் கட்டமைப்பில் பழுது, வவுனியாவில் தேங்கிக் கிடக்கும் சடலங்கள்!

தனிமைப்படுத்தல் விதிமீறிய நபருக்கு 45,000 ரூபா தண்டம் மல்லாகம் நீதிமன்று விதித்தது!