in ,

தண்ணீர் மீட்டர் கருவிகள் திருட்டு – பிரதேச சபை தலைவர் கைது!

தேசிய நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான தண்ணீர் மீட்டர் கருவிகள் 477 திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கேகாலை – தெரனியகல பிரதேச சபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெரனியகலவில் உள்ள நீர் திட்ட சேமிப்பகம் ஒன்றில் இருந்தே இவை கடந்த மாதம் திருடப்பட்டன.

சம்பவம் தொடர்பில் முன்னதாக மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்படி பிரதேச சபை தலைவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 98 நீர் மீட்டர் கருவிகள் மீட்கப்பட்டது.

‘சின்னக்கலைவாணர்’ விவேக் மரணம்!

அமைச்சு பதவிக்காகவே விஜயதாச உளறுகிறார் – கதறுகிறார் மஹிந்தானந்த