செய்திகள்

தத்தழித்த படகுகளை மீட்டது கடற்படை

அம்பன் சூறாவளியினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் இந்தோனேஷியா கடற்பரப்பிற்கு அருகாமையில் இழுத்துச்செல்லப்பட்டு கடலில் தத்தழித்துக்கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘சமுதுர’ கப்பல், ஈடுபட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை மீன்பிடிப் படகுகளை மீட்பதற்காக அங்கு சென்ற கடற்படை கப்பல் படகுகளுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது

அம்பாந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களிலிருந்து சென்ற குறித்த மீன்பிடிப் படகுகளுடன் 180 மீனவர்களை மீட்பதில் கடற்படை கப்பல் ஈடுபட்டுள்ளது.

Related posts

மீன் பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு

reka sivalingam

ஸ்ரீசுவுடன் பேச்சு நடத்த வாய்ப்பு கோரியது ஐதேக

G. Pragas

நாடாளுமன்றின் சிறிய நிலப்பரப்பு சரிந்தது

G. Pragas