செய்திகள் பிரதான செய்தி

தனிமைப்படுத்தலில் இருந்தோர் குடும்பத்துடன் இணைப்பு!

மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்களை குடும்பத்துடன் இணைக்கும் பணிகள் இன்று (02) இடம்பெற்றது.

வாழைச்சேனையில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஐந்து நபரும், மயிலங்கரச்சையில் ஆறு பேரும், மஜ்மாநகரில் நான்கு பேருமாக பதினைந்து பேர் சுய தனிமைப்படுத்தலில் இருந்தனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் இவர்களது இல்லங்களுக்கு சென்று இவர்களது சுய தனிமைப்படுத்தல் தொடர்பிலான கடிதங்களை வீடுகளில் ஒட்டியுள்ளனர்.

அத்தோடு கடந்த இரு வாரங்களுக்கு முதல் குவைத், கட்டார், டுபாய் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பதின்மூன்று பேர் சுய தனிமைப்படுத்தலில் இருந்து கொரோனா தொற்று இல்லை என்ற நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுய தனிமைப்படுத்தல் மூலம் பதினான்கு நாட்கள் வீட்டில் இருந்த பதின்மூன்று பேருக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. (150)

Related posts

நுரைச்சோலை மின் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்

Tharani

லோயாலா கல்லூரி நீச்சலில் சம்பியன்

Tharani

சம்பிக்கவுக்கு விளக்கமறியல்!

G. Pragas