கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

தனிமைப்படுத்தலுக்கு வீட்டை கையளித்த சுசந்த

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோய் அறிகுறிகள் காணப்படும் சந்தேக நபர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக திருகோணமலை மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தமது வீட்டை வழங்கியுள்ளார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந்திடம் இன்று (25) இவ்வீடு கையளிக்கப்பட்டது.

இதேவேளை பொது இடங்களில் தொற்று நீக்கும் விடயங்களை மேற்கொள்ளும் நோக்கில் அவரது சொந்த நிதியுதவியுடன் கிருமி நாசினி தெளிகருவிகளையும் வழங்கி வைத்தார்.

அனைத்து பிரதேச சபைகளுக்கும் இக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் திருகோணமலை, கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கும் கிருமி நாசினி தெளி கருவி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச சபைகளின் தலைவர்கள், மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். கடந்த அமைச்சரவையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சுசந்த புஞ்சி நிலமே செயற்பட்டார்.

Related posts

பயங்கரவாத தாக்குதல் குறித்து 4 தடவை அறிவிக்கப்பட்டது – பேராயர் சாட்சியம்

G. Pragas

அறிவொளி மன்றத்தின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

reka sivalingam

கொடியவன் கோத்தாவால் தனக்கே தமிழ் மக்கள் வாக்கு என்று சஜித் எண்ணுகிறார்

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.