in , ,

தனியொருவனாய் தெஆ’வை பந்தாடிய பகர் சமன் | கைநழுவிய இரட்டை சதமும், வெற்றியும்!

சற்றுமுன் முடிவுற்ற பாகிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 17 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாபிரிக்க அணியின் 341 என்ற வெற்றியிலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணியை, பகர் சமன் தனியொருவனாக நின்று தூக்கி நிறுத்தி வெற்றி பெறப் போராடிய போதிலும் 17 ஓட்டங்களினால் வெற்றி கைநழுவியுள்ளது.

வெற்றி கைநழுவியது போலவே அசத்தலாக ஆடிய பகர் சமனின் இரட்டைச்சதமடிக்கும் வாய்ப்பும் கைநழுவ 155 பந்துகளில் 193 ஓட்டங்களுடன் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

இதன்போது 18 பவுண்டரிகளையும் 10 சிக்ஸ்ஸர்களையும் அவர் விளாசியிருந்தார்.

போட்டி சுருக்கம்,

தென்னாபிரிக்கா 341/6 (50)
பாகிஸ்தான் – 324/9 (50)

ஈஸ்டர் பயங்கரவாதம்; குற்றப்பத்திர தாக்கல் தாமதமாகும்!

தாளையடி கடலில் மூழ்கி இளைஞன் பலி!