சினிமாசெய்திகள்

தனுஷ் உலகின் சிறந்த கொலையாளி

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹொலிவூட் படம் ‘தி கிரே மேன்’ Grey Man.

இந்தப் படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வால், எண்ட்கேம் உள்ளிட்ட ஹொலிவூட் படங்களை இயக்கிய இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

படத்தில் தனுஷின் கதாப்பாத்திரம் குறித்து ரூஸோ கூறுகையில்,

‘‘தனுஷ் உலகின் சிறந்த கொலைகளில் ஒருவராக நடித்திருக்கிறார்கள். படத்தில் அசாத்தியமான இரண்டு சண்டைக்காட்சிகள் தனுஷூக்கு உண்டு. இந்தப் பாத்திரத்தை அவருக்காகவே எழுதியுள்ளோம். ஹீரோவோடு சண்டையிடும் கெட்டவன் பாத்திரம். அவர் சிறப்பாக அந்தக் கதாபாத்திரத்தை நடித்திருக்கிறார். அத்துடன் சுவாரசியமாகவும் நடித்துள்ளார்’’

இந்தப் படம் படம் ஜுலை 15 திரையரங்குகளில் வெளியாகிறது. அத்துடன் 22-ஆம் திகதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது– என்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994