சினிமா செய்திகள்

தனுஸின் பட்டாஸா இல்லை பப்ஜியா?.

அசுரன் படத்தினுடைய மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனுஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்த படமான பட்டாஸ் படத்தின் முதலாவது பாடல் வெளியாகியுள்ளது.

“chill bro” என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் போன்றோர்களாகும். தனுஸ் உடன் முதல் தடவையாக இவர்கள் பட்டாஸ் படத்தில் இணைகின்றனர்.

இந்தப்பாடலில் வருகின்ற “winner winner chicken dinner ” எனும் வரிகள் இப்போதைய காலகட்டத்தில் இளைஞர்களை மிகவும் கவர்ந்த பப்ஜி விளையாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் வரிகளாகும்.

அவ்வரிகளுக்கு பப்ஜியில் வருவது போன்றே தனுஸ் நடனமாடியிருக்கின்ற காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கிணற்றில் விழுந்த ஒருவர் சாவு!

G. Pragas

பிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்

G. Pragas

உலக சமாதான சுட்டியில் 77ம் இடம் இலங்கைக்கு

G. Pragas