in

”தன்பக்க கோல் அடிக்கும் செயற்பாடு எனக்கு இல்லை” சிரீதரனுக்கு சிவஞானம் காட்டமான பதில்!

கட்சி மானத்தை காப்பதற்காக மாகாணசபையை குழப்பியவர்களை
நான் காட்டிக் கொடுக்க மாட்டேன் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்!

மாகாண சபை நிர்வாகத்தை யார் யார் குழப்பினார்கள். எவற்றை எல்லாம் குழப்பினார்கள். அவற்றின் பின்னணியில் யார் யார் இருந்தார்கள் என்ற நூற்றுக்கணக்கான விடயங்கள் எனக்குத் தெரியும். கட்சி நலன் கருதி நான் அவை பற்றி பொது வெளியில் பேசியதில்லை. அதனால் நான் பலவீனமானவன் என்று யாரும் கருதக் கூடாது. இவ்வாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் உள்ளூர் தொலைக்காட்சி நேர்காணலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண சபையை குழப்புவதில் அனுபவம் வாய்ந்த சீ.வி.கே.சிவஞானமும் கவனம் செலுத்தினார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:

17 உறுப்பினர்களுடன் சேர்ந்து மாகாண சபையை கலையுங்கள் என்ற கடிதத்தை ஆளுநரிடம் நான் கையளித்தமையையே நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் என்மீதான குற்றச்சாட்டாக முன்வைத்தார். இது தொடர்பில் நான் பல தடவைகள் தெளிவுபடுத்திவிட்டேன். அந்தக் கடிதத்தில் மாகாணசபையைக் கலைக்குமாறு குறிப்பிடவில்லை. முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை எங்கோ தயாரித்துவிட்டு என் கையில் திணித்து, என்னை அதில் பலிக்கடா ஆக்கிவிட்டார்கள். இதனைப் பலதடவைகள் நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறுவதைப்போல, இந்த விடயங்கள் ஒன்றும் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராசாவுக்குத் தெரியாமல் நடைபெறவில்லை. அவர் கட்சித் தலைமையகத்தில் இருக்கும்போதுதான் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்துப் பெறப்பட்டது. இந்தக் கைங்கரியத்தை முன்னெடுத்தவர்கள் வேறு எங்கேயோ கூடித் தயாரித்த வரைபை அவரிடம் காட்டிய பின் மாற்றியமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
நான் அவைத் தலைவர் மட்டும்தான் என்பதையும் நிர்வாக விடயத்தில் நேரடிப் பொறுப்பு எதுவும் கொண்டிருக்கவில்லை என்பது சாதாரண அறிவுக்கெட்டிய விடயம்.

மாகாண சபை நிர்வாகத்தை யார் யார் குழப்பினார்கள். எவற்றை எல்லாம் குழப்பினார்கள். அவற்றின் பின்னணியில் யார் யார் இருந்தார்கள் என்ற நூற்றுக்கணக்கான விடயங்கள் எனக்குத் தெரியும். கட்சி நலன் கருதி நான் அவை பற்றி பொது வெளியில் பேசியதில்லை. அதனால் நான் பலவீனமானவன் என்று யாரும் கருதக் கூடாது.
இப்பொழுது நடப்பது போல தமிழ் அரசுக் கட்சிக்குள் தன்பக்க கோல் அடிக்கும் செயற்பாடு இல்லாத வரலாற்றினூடாக வந்தவன் நான். தேவைப்படும் போது அவை பற்றி பேசுவேன். 50 வருடத்துக்கு மேலான அரசியல் மற்றும் மக்கள் சேவை அனுபவமும் 20 வருடத்துக்கு மேலான தேர்தல்களைச் சந்தித்த அனுபவமும் எனக்குண்டு என்பதை நான் கூறியாக வேண்டும், என்றார்.

இந்தோனேசியாவில் தீப்பிடித்தது சிறை 41 கைதிகள் சாவு!

ஹன்ரரோடு மோதிய ‘கப்’ இருவர் பரிதாபச் சாவு!