செய்திகள்

தபால் ரயில் சேவைகள் இரத்து

பலத்த மழை காரணமாக இன்றிரவு முன்னெடுக்கப்படவிருந்த 4 தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு – கோட்டையிலிருந்து மட்டக்களப்பிற்கும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு – கோட்டைக்கும் இடையிலான இரவு நேர ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலைக்கும் திருகோணமலையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் இடையில் முன்னெடுக்கப்படவிருந்த 2 ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பொலன்னறுவையிலிருந்து கொழும்பிற்கு பயணிக்கவிருந்த புலதிசி நகர்சேர் கடுகதி ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலவும் அனர்த்தநிலை காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவைக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

மலையக மார்க்கத்திலான ரயில் சேவை எல்ல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

ரஞ்சனின் குரல் பதிவுகள் மறைக்கப்படுகிறது – ஹிருனிக்கா குற்றசாட்டு

Tharani

பாலியல் லஞ்சம் கோரிய பொலிஸ் பொறுப்பதிகாரி

reka sivalingam

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு – சிக்கலுக்குரியது

Tharani

Leave a Comment