in

தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பு!

கொரோனா மூன்றாம் அலை ஏற்படலாம்  எனும் அச்சம் காரணமாக  அடுத்த  மாதம் 31ஆம் ஆம் திகதி வரை ஊரடங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட்டித்துள்ளார்.

 மதம்- அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. எனவே, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.

“கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், அண்டை மாநிலமான கேரளாவில்  கொரோனா மற்றும் நிபா வைரஸ் நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றமை போண்ற காரணங்களைக் கருத்தில் கொண்டும் தடை நீட்டிக்கப்படுகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் அஜித் நிவாட் கப்ரால்!

இலங்கை மற்றும் சுற்றுலா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி!