செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

தமிழரசுக் கட்சியை காப்பாற்ற தாய்க்குலம் ஓரணியில் திரள்வு!

இலங்கைத் தமிழரசுக்கட்சியையும், அதன் சின்னத்தையும் பாதுகாப்பதற்காக தாய்குலம் ஓரணியில் திரண்டுள்ளதாக அக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தெரிவித்தார்.

யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று (09) மலரஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கான கட்சி, இந்த கட்சி ஒருபோதும் தனது நிலையில் ஒருந்து மாறக்கூடாது. நாங்கள் இருக்கின்ற இடம் தூய்மையாக இருக்க வேண்டும். நாங்கள் வளர்க்கின்ற மரம் செழிப்பானதாக இருக்க வேண்டும். எங்களுடைய கொள்கைகள் நேர்மையானதாக இருக்க வேண்டும்.

நாங்கள் எடுக்கின்ற முடிவுகள் சரியானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தாங்கள் போராட்டத்தினை முன்னெடுத்து உள்ளோம்” – என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

ஹிருணிகா வழக்கு மார்ச் மாதம் வரை ஒத்திவைப்பு

Tharani

பிரதமரிடம் ஏன் சென்றோம் – கூட்டமைப்பு விளக்கம்!

G. Pragas

இணுவில் கந்தசுவாமி ஆலய உலகப் பெருமஞ்ச விழா அழைப்பிதழ்!

Bavan