கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

தமிழரசு கட்சி உறுப்பினர் கோத்தாவுக்கு ஆதரவு

தமிழரசு கட்சியின் வாகரை பிரதேச சபை வட்டார உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் செயலாளருமான பாலசிங்கம் முரளிதரன் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் கூறுகையில்,

அன்று நாங்கள் ஆயுத ரீதியான போராட்டத்தை செய்து கொண்டிருந்தோம் 2009 யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் எங்களுடைய சமூகம் அநாதைகளாக இருக்கின்றார்கள். இன்று கிழக்கு மாகாண தமிழ் மக்களாகிய நாங்கள் உரிமையை வேறு சமூகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.

கடந்த காலத்திலிருந்து நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வு தருவதாக வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இன்று கிழக்கைப் பொறுத்த வரையில் எமது தமிழ் சமூகம் வேலை வாய்ப்பின்மை, பொருளாதார பலமின்மை போன்ற பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்றும் வாகரை பிரதேசதத்தில் தமிழர்களுடைய காணிகள் அபகரிப்பு இடம்பெற்று வருகின்றது. காணிகள் பறிபோன பின்னர் உரிமையை பெற்று என்ன செய்ய முடியும்? எனவே எங்களுடைய சமூகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் இந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் கோட்டாபய ராஜபஷவுக்கு வாக்களிக்க வேண்டும் – என்றார்.

Related posts

புலிகள் முன் வைத்ததை விட மோசமான நிபந்தனைகள்

G. Pragas

’ஆதன வரியை செலுத்துவோருக்கு விசேட கழிவுகள் வழங்கப்படும்’

கதிர்

அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் கொரோனா இல்லை!

G. Pragas