செய்திகள் பிந்திய செய்திகள்

தமிழரசு கட்சி எதை பார்த்து சஜித்தை ஆதரிக்கிறது – சஜித்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன விடயத்தை கண்டு அவர்களுக்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கியுள்ளது என்று ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (04) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

காலத்திற்கு காலம் நாம் ஆட்சி மாற்றத்தை செய்யவில்லை என்றும் ஆட்சியை மாற்றியதாக எண்ணிக்கொண்டு ஆட்களைதான் மாற்றியுள்ளோம். இரண்டு தடவை அன்னம் கவிழ்ந்துவிட்டது. முதல் தடவை சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக வாக்களித்தோம். அதில் பயன் கிடைக்கவில்லை. இரண்டாவது தடவையாக நல்லாட்சி அரசிற்காக அன்னத்திற்கு வாக்களித்தோம். இரு தடவையும் தமிழ் மக்களிற்கு எவையும் கிடைக்கவில்லை.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் போர் குற்றம் இழைத்தவர்களை பாதுகாப்பதாகவே கூறப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா தானே இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்கின்றார். அவ்வாறெனில் யார் கொலைகாரன். சரத் பொன்சேகாவும் கொலைகாரனே. இவர்களை போன்றவர்களை பாதுகாப்பதற்கா தமிழரசுக் கட்சி சஜித்திற்கு ஆதரவு வழங்கியது? – என்றார்.

Related posts

அங்கஜன் சார்பாக இராணுவம் செயற்படுகிறது – இவ்வாறு சுகாஸ் குற்றச்சாட்டு!

G. Pragas

மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று; எண்ணிக்கை 373 ஆனது!

G. Pragas

இதுவரை 712 பேர் குணமடைந்தனர்!

G. Pragas