செய்திகள்

தமிழர்களின் அடையாளங்களை காப்பாற்ற, இந்தியாவின் பங்களிப்பு அவசியம்..! – சத்தியலிங்கம்

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் எமது இனத்தின் அடையாளங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் என முன்னாள் வட மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும்,

“தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தமிழர்களின் தாயகத்தில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரமடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.

இதற்காகவே அரச தலைவரால் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாத தனிச்சிங்களவர்களை உள்ளடக்கிய தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழர் தாயகத்தின் தனித்துவத்தை பாதுகாக்க வரலாற்று ரீதியாக மத, கலாசார, மொழி, பண்பாட்டு விடயங்களில் எமக்கு தாய் நாடாக இருக்கும் பாராத தேசம் தலையீடு செய்ய வேண்டும்” – என்றுள்ளது.

Related posts

சபாநாயகர், சஜித், ரணில் இடையே சந்திப்பு!

reka sivalingam

கொரோனா: தொழில்துறை பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வு

Tharani

மணல் அகழ்வினால் சுற்றுச் சூழல் பாதிப்பு!

Tharani