செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தி

தமி­ழர்­க­ளின் பூர்­வீ­க­மான- காணிகளைக் கையகப்படுத்தாதே! குருந்தூர்மலையில் போராட்டம்

தண்­ணி­மு­றிப்பு, குருந்­தூர்­ம­லை­ யைச் சூழ­வுள்ள தமிழ் மக்­க­ளின் பூர்­வீ­கக் காணி­களை தொல்­லி­யல் திணைக்­க­ளம் கைய­கப்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­தும், நீதி­மன்­றக் கட்­ட­ ளையை மீறி பௌத்த கட்­டு­மா­னம் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தைக் கண்­டித்­தும் நேற்­றுக் குருந்­தூர்­ம­லை­யில் பெரும் ஆர்ப்­பாட்­டம் ஒன்று மக்­க­ளால் முன் ­னெ­டுக்­கப்­பட்­டது.

தண்­ணி­மு­றிப்பு மற்­றும் குமி­ழ­மு­னை­யைச் சேர்ந்த மக்­க­ளால் நடத்­தப்­பட்ட இந்­தக் கவ­ன­வீர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­தில் அர­சி­யல் கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­கள், சமூக அமைப்­புக்­க­ளைச் சேர்ந்­தோர் எனப் பலர் கலந்­து­கொண்­ட­னர்.

குருந்­தூர்­ம­லை­யைச் சூழ­வுள்ள தமிழ் மக்­க­ளின் பூர்­வீ­கக் காணி­க­ளான 632 ஏக்­கர் காணி­களை தொல்­லி­யல் திணைக்­க­ளம் கைய­கப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அதே­நே­ரம் முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்­தின் கட்­ட­ளையை மீறி குருந்­தூர் மலை­யில் தமிழ் மக்­க­ளின் பூர்­வீக வழி­பாட்­டி­டத்­தில் பௌத்த விகாரை ஒன்று அமைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இவற்­றுக்கு எதிர்ப்­புத் தெரி­வித்தே இந்த ஆர்ப்­பாட்­டம் மக்­க­ளால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

குருந்­தூர் மலை­ய­டி­வா­ரத்­தில் ஒன்­று­கூ­டிய மக்­கள் பதா­கை­க­ளைத் தாங்­கி­ய­வா­றும், கோசங்­களை எழுப்­பி­யும் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். குருந்­தூர்­ம­லை­யில் மேற்­குப் பகு­திக்­குச் சென்ற மக்­கள் அங்­கும் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­ஞா­னம் சிறீ­த­ரன், வட­மா­காண சபை முன்­னாள் உறுப்­பி­னர்­க­ளான துரை­ராசா ரவி­க­ரன், கந்­தையா சிவ­நே­சன், தமிழ்த்­தே­சிய மக்­கள் முன்­ன­ணி­யின் ஊட­கப் பேச்­சா­ளர் சுகாஸ், கரை­து­றைப்­பற்று பிர­தேச சபை உறுப்­பி­னர் சி.லோகேஸ்­வ­ரன், புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச சபை உறுப்­பி­னர் ஜோன்­சன், கரைச்சி பிர­தே­ச­சபை உறுப்­பி­னர் ஜீவன், யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக ஒன்­றி­யத்­தி­னர் போன்­ற­வர்­க­ளும் மக்­கள் ஏற்­பாடு செய்த இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் கலந்து கொண்­டி­ருந்­த­னர்.

மக்­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட சந்­தர்ப்­பத்­தில் அங்கு ஆயு­தம் தாங்­கிய பொலி­ஸார் பெரும் எண்­ணிக்­கை­யில் குவிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­களை அச்­சு­றுத்­தும் வகை­யில் நடந்து கொண்ட பொலி­ஸார், ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­களை ஒளிப்­ப­ட­மும் எடுத்­த­னர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214