செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

தமிழர்களுக்கு கோத்தாவினால் மட்டுமே தீர்வு தர முடியும் – அங்கஜன்

“ஐக்கிய தேசிய கட்சியூடாக எமது மக்களுடைய எதிர்பார்ப்புக்கள், அபிலாசைகள் நிறைவேறும் என்று கனவு கண்டோம். ஆனால் ஐதேக அரசாங்கம் துரோகம் செய்துவிட்டது. அவர்கள் செய்தது துரோகம். எமது தமிழ் தலைவர்கள், இந்த அரசுக்கு ஆதரவு கொடுக்கும் தலைவர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர். தீபாவளிக்கு தீர்வு வரும் என்றார்கள் ஆனால் எதுவும் வரவில்லை”

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் இன்று (28) மதியம் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் பிரச்சாரத்தில் அங்கஜன் இராமநாதன் எம்பி தெரிவித்தார். மேலும்,

தீர்வு பற்றி மட்டுமே பேசுவேன் அபிவிருத்திகள் பற்றி பேச மாட்டேன் என்று சம்பந்தன் கூறுவார். ஆனால் இன்று 13 கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். அதில் 10 கோரிக்கைகள் மக்களின் அடிப்படைத் தேவைகளாகும். நான்கு ஆண்டுகளில் பல வரவு செலவு திட்டங்கள், நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கூட வந்தன ஆனால் எதுவும் செய்யவில்லை.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித்தை தான் ஆதரிக்க போகின்றது. ஏன்?, அவர்கள் ஐதேகவிடம் சலுகைகளை வாங்குகின்றனர். தமிழர்களின் பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியுமென்றால் கோத்தாபய மற்றும் மஹிந்தவின் அரசு மட்டுமே அபிவிருத்திகளை கொடுத்து தமிழர்களை மீட்டெடுக்கும் – என்றார்.

Related posts

வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகிக்கு அழைப்பாணை

G. Pragas

அரசியலை தொடர விரும்பும் மைத்திரி

G. Pragas

வட, கிழக்கில் குள்ள நரிகள் கெஞ்சுகின்றன – மனோ

G. Pragas

Leave a Comment