செய்திகள் பிரதான செய்தி

தமிழர்களை கொன்ற இராணுவ சார்ஜன்ட் சுனிலுக்கு பொது மன்னிப்பு?

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் தமிழர்கள் எட்டு பேரை படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்க உள்ளார் என்று மீண்டும் தகவல் வெளியாகியுள்ளது.

2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி, யாழ்ப்பாணம் மிருசுவில் இராணுவ முகாமுக்கு அருகே எட்டு தமிழர்களைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உட்பட 14 சிப்பாய்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த மரண தண்டனை கைதியான சுனில் பொது மன்னிப்பில் விடுதலை
செய்யப்பட்டுவார் என்றும் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அண்மையில் பலமுறை தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதனை அரசு மறுத்து வந்த நிலையில் மீண்டும் பொது மன்னிப்பளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது.

போர்க்காலத்தில் சுனில் ஆற்றிய பணிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சரணடைந்தவர்கள் குறித்து 10 வருடங்களாக பதில் இல்லை

reka sivalingam

உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தப் போவதில்லை – ஜனாதிபதி

reka sivalingam

மத்தள விமான நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும்

reka sivalingam