செய்திகள் பிரதான செய்தி

தமிழர்களை கொன்ற சுனில் விடுதலையானாரா? மஹிந்த கருத்து

தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் 2000ம் ஆண்டு தமிழர்கள் எட்டுப் பேரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுனில் ரத்னாயக்க பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியான போது அதனை ஊடகப்பிரிவு மறுத்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் இன்று அவர் பொது மன்னிப்பின் விடுதலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

எனினும் தமிழ் ஊடகப் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது குறித்த மரண தண்டனை கைதி விடுதலை செய்யப்படவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

யாசகம் பெற்ற வயோதிபர் சாவு; பசிக்கொடுமையா? விசாரணை தீவிரம்!

G. Pragas

முன்னாள் சுவிஸ் தூதுவர் தலைமையிலான குழு இலங்கைக்கு வருகை

reka sivalingam

ரஞ்சனின் 121 000 குரல் பதிவுகள் உள்ளன-மஹிந்தானந்த

கதிர்