செய்திகள் பிரதான செய்தி

தமிழர் தாயகப் பகுதிகளில் நண்பகல் வரை 50%ற்கும் மேல் வாக்குப் பதிவு!

வாக்கிடுவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், நண்பகல் வரையில் தமிழர் தாயகப் பகுதிகளில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 53 ஆயிரத்து 61 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இது மொத்தத்தில் 57.51 சதவீதமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தில் பி.ப. 2 மணி வரையில் 53.2 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் பி.ப. 1.30 மணி வரையில் 55.93 சதவீத வாக்களிப்பு பதிவாகியுள்ளது. வவுனியா மாவட்டத்தில் மதியம் 1.30 மணி வரையில் 56.43சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் பி.ப. 2 மணி வரையில் 46 ஆயிரத்து 498 பேர் வாக்களித்துள்ளனர். இது மொத்தத்தில் 50.40 சதவீதமாகும்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பி.ப 01.00 மணிவரையில் 48 சதவீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு?

reka sivalingam

கம்பஹாவில் இருவருக்கு தொற்று!

G. Pragas

உசாராகுங்கள்; க.பொ.த (சா/த) பரீட்சை முடிவு வெளியாகும் வாரம் அறிவிப்பு!

G. Pragas