செய்திகள் பிந்திய செய்திகள் பிரதான செய்தி

தமிழ் அடிப்படைவாதக் கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தோம்

நாட்டை பிளவுப்படுத்தக்கூடாது என்றக் காரணத்தினால்தான் தமிழ்க் அடிப்படைவாதக் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்தோம் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பன்னலையில் நேற்று (01) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார். மேலும்,

தற்போது பொலிஸார் நாட்டுக்காக பாரிய சேவைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனது காலத்தில்தான் இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. எனது காலத்தில்தான் இவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டது. ஆனால், இன்று இவர்களுக்கு மீண்டும் சவால்கள் வந்துவிட்டன.

உயர் பதவிகள், சம்பள உயர்வுகள் கிடைப்பதில்லை. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வோம். இராணுவத்தினருக்கு எம்மால் தனியான வைத்தியசாலையொன்று கட்டப்பட்டதைப்போல, பொலிஸாருக்கும் தனியான வைத்தியசாலையொன்றை நாம் அமைப்போம்.

இந்த ஊக்குவிப்புக்களே அவர்களின் சேவையை இன்னும் முன்னேற்றமடையச் செய்யும். இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம், பாதாளக்குழுக்கள், போதைப்பொருள் வர்த்தகர்கள் தலைத்தூக்காமல் இருக்க எமக்கு சிறந்ததொரு பொலிஸ் சேவையொன்று தேவைப்படுகிறது.

நாம் என்றும் பயங்கரவாதத்துக்கும் அடிப்படைவாதத்திற்கும் இடமளிக்கப்போவதில்லை. ஒருமித்த நாட்டை பிளவுப்படுத்த நாம் எந்தவொரு தரப்புக்கும் அனுமதிக்கப்போவதில்லை.

இதனால்தான், தமிழ் அடிப்படைவாதக் கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தோம். இவை எமது கொள்கைகளுக்கு முற்றிலும் முரணான வகையிலேயே அமைந்துள்ளன – என்றார்.

Related posts

குழந்தையை பிரசவித்த தாய்; காய்ச்சலினால் மரணம்!

G. Pragas

சிறுமி வன்புணர்வு; குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

G. Pragas

சுதந்திர வர்த்தக ஊழியர்கள் விடுக்கும் கோரிக்கை!

Tharani