in

தமிழ் அரசியல் கைதிகளை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!!

– விக்னேஸ்வரன் எம்பி

இந்த அரசாங்கம் எல்லா இலங்கை மக்களுக்குமான அரசாங்கம் அல்ல என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்து வருகின்றது. தங்களுக்கு வாக்களித்த பௌத்த சிங்கள மக்களின் விருப்பங்களுக்கு அமைவாகவே செயற்படமுடியும் என்று ஜனாதிபதி மற்றும் அரசாங்க உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கூறிவருகின்றனர்.

இவ்வாறு க.வி.விக்னேஸ்வரன் எம்பி இன்று (8) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அரசியல் காரணங்களுக்காக சிறைக்கைதிகளை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பதை சரியா பிழையா, நீதியா அநீதியா என்று பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் அல்லாது நாட்டின் வழமையான சட்டத்தின் கீழ் தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கு எதிரான வழக்குகள் பதியப்பட்டிருந்தால் அத்தனை பேரும் தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருப்பர்.

ஆகவே தமிழ் அரசியற் கைதிகளை உடனே மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

முழுமையான உரை வருமாறு,

வவுனியா நகரில் சில வீதிகள் முடக்கம்!

அமெரிக்காவில் குடியேறுவதற்காக ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்!