செய்திகள் பிந்திய செய்திகள் பிராதான செய்தி வவுனியா

தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானம் நேற்று அறிவிக்கப்பட்டது

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது.

இதனை எம்.ஏ.சுமந்திரன் எம்பி நேற்று (03) மாலை அறிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை அலுவலகமான ‘தாயகம்’ பணிமனையின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி, இறுதி முடிவை அறிவிக்கும் அதிகாரம் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

முல்லைத்தீவும் முடங்கியது

G. Pragas

ஞானசார தேரர் மற்றும் மூவருக்கு அழைப்பாணை

G. Pragas

வடகீழ் பருவ பெயர்ச்சியை எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடல்

G. Pragas

Leave a Comment