செய்திகள் பிரதான செய்தி

தமிழ் தலைவர்களை போல் ஏமாற்ற தயாரில்லை – பிரதமர்

ஜெனிவாவின் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தை எமது நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர் கொள்ளவுள்ளோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தர்.

தமிழ் ஊடகப்பிரதானிகளுடன் இன்று (14) இடம்பெற்ற சந்திப்பில் பிரதமர் இதனை தெரிவித்தார். மேலும்,

அரசில் முஸ்லிம் அமைச்சர்மார் எவரும் இல்லாதது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது,

ப:- முஸ்லிம் பிரதிநிதிகளை அனுப்பி அந்நிலையை சரி செய்ய முஸ்லிம் மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

கடந்தமுறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை சார்ந்த முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்க முடிவு செய்து பெயர்களை அனுப்புமாறு நாம் கேட்டோம். ஆனால் அவர்கள் பெயர்களை அனுப்பவில்லை. ஆனால் பைசர் முஸ்தபாவை அமைச்சுப் பொறுப்பை ஏற்க கோரினோம். அவர் மறுத்துவிட்டார். – என்றார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உங்களின் நிலைப்பாடென்ன என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது,

ப:- நான் அதே நிலைப்பாட்டில் இருக்கிறேன். ஆனால் பல தசாப்த காலமாக தமிழர்களை அவர்களது அரசியல் தலைவர்கள் ஏமாற்றியது போன்று ஏமாற்ற நான் தயாராக இல்லை. – என்றார்.

Related posts

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani

நாம் தொடர்ந்தும் ஏமாளிகளாக இருக்கிறோம் – விக்னேஸ்வரன்

G. Pragas

மட்டக்களப்பு விபத்தில் விவசாயி பலி!

reka sivalingam