சினிமா செய்திகள்

தமிழ் திரையுலக முன்னணி தயாரிப்பாளர் மரணம்!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த முன்னணி தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் (67-வயது) சிகிச்சை பலனின்றி இன்று (10) காலமானார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணித்தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று தான் லட்சுமி மூவி மேக்கர்ஸ். கே.முரளிதரன், வி.சுவாமிநாதன் மற்றும் ஜி.வேணுகோபால் என மூவர் இணைந்து இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

1994ம் ஆண்டு வெளியான அரண்மனை காவலன் படத்தின் மூலம் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத் தயாரிப்பில் இறங்கியது. “கோகுலத்தில் சீதை, பிரியமுடன், எனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத் தேடி, பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை” உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளது.

இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்தைத் தயாரித்து வெளியிட்டது.

இந்நிலையிலேயே கொரோனா தொற்றுக்கு உள்ளான தயாரிப்பாளர் சுவாமிதான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். தமிழ்த் திரையுலகில் நிகழ்ந்த முதல் கொரோனா மரணம் இதுவாகும்.

Related posts

கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா?

Bavan

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட அமீர்

G. Pragas

யாழில் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு!

Tharani