செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

தமிழ் தேசிய இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல்!

தமிழ் தேசிய இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் இன்று (15) யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பாடசாலை முன்றலில் காலை 9:30 மணிக்கு இடம்பெற்றது.

முதல் நிகழ்வாக பொது ஈகை சுடர் ஏற்றப்பட்டது. முதல் பொது ஈகை சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றிவைத்ததை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது செயலர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன், மகளிர் அணி பொறுப்பாளர் வாசுகி சுதாகரன், துணை தலைவி திருமதி கிருபா கிரிதரன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் றஜிதா விஜயழகன் மற்றும் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் இ.முரளீதரன் உட்பட பலரும் ஏற்றியதுடன் மலர் வணக்கம் செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

நாகர்கோவில் மகா வித்தியாலயத்தின் சந்திரிகா ஆட்சிக் காலத்தில் 1995ம் ஆண்டு செப்டெம்பர் 22ம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சித் தாக்குதலில் 21 மாணவர்கள் உட்பட 39 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதேவேளை நினைவேந்தல் நிறைவுற்று சில மணி நேரங்களின் பின்னர் பருத்தித்துறை பொலிஸார் மற்றும் இராணுவம் என பல வாகனங்கள் உந்துருளிகளில் வருகை தந்திருந்தனர். எனினும் நினைவேந்தல் நிறைவுற்றதால் அவர்கள் முரண்பாடு ஏதும் இன்றி திரும்பி சென்றதுடன், நாகர்கோவில் கிராமத்திற்கு செல்வோர்கள் அனைவரும் இராணுவத்தினரால் நாகர்கோவில் சந்தி பகுதியில் வைத்து ஆள் அடையாளம் பரிசீலிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது

reka sivalingam

சுவிஸ் தூதுவரை திருப்பி அழைக்கவில்லை – தூதரகம் மறுப்பு

G. Pragas

பிரித்தானியா பிரதமர் வைத்தியசாலையில் அனுமதி!

reka sivalingam