செய்திகள் பிராதான செய்தி

தமிழ் தேசிய கட்சிகள் இந்திய எடுபிடிகள் என்று கூறுகிறார் கஜேந்திரகுமார்

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கும் கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஐந்து தமிழ் தேசிய கட்சிகளும் இந்திய தூதுவர்களிடம் அனுமதி பெறாமல் மசலக்கூடம் போக மாட்டார்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இன்று (21) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். மேலும்,

அப்படிப்பட்டவர்கள் எப்படி இந்தியா தடை செய்த கோட்பாடுகளை ஒன்றிணைந்து கைச்சிட்டனர் என்பது தான் கேள்வி. பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைத்த கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்தகோரிக்கையும் இந்தியாவின் கண்காணிப்பிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்குக்கு தெரியாமல் இந்த ஆவணம் தயாரித்திருக்க வாயிப்பில்லை ஏன்னெனில் அவர்கள் எப்பொழுதுமே இந்தியாவின் முகவராக செயல்படுபவர்கள் , நாங்கள் ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கேட்கும் பொது செய்யாதவர்கள் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு கோத்தபாயவை இந்தியாவின் எண்ணத்துக்கு இழுக்கும் முயற்சிக்கு உதவியிருக்கிறார்கள் , இது மீண்டும்மீண்டும் இந்தியா நலனிலேயே கூட்டமைப்பு உட்பட கட்சிகள் அக்கறை செலுத்துகின்றனர்.

மற்றும் இந்த தேர்தல் வெறுமனவே இலங்கை சனாதிபதி தேர்தல் அல்ல இது சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நடக்கும் தேர்தலே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

றெஜினா கொலை பகுப்பாய்வு – சந்தேக நபர்களுக்கு தொடர்பு

G. Pragas

ராஜபக்ச குடும்ப அரசியல் சூடிபிடித்தது! சமல் ராஜபக்ச சுயாதீனமாக போட்டி!

G. Pragas

பயங்கரவாத பழிசுமத்தி கைது செய்யக் கோரினர்

G. Pragas

Leave a Comment