செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

தமிழ் மக்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்

நாளை (31) இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பில் தமிழ் மக்கள் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளது.

5 கட்சிகளின் கூட்டம் இன்று (30) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போதே, மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் அரசு கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சீ.வீ.கே.சிவஞானம், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், சதானந்தன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என்.சிறிகாந்தா, ஹென்ரி மகேந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும் வெளியாகாததால் இறுதி முடிவையும் எடுப்பதில்லை என்றும், தபால்மூல வாக்களிப்பில் மக்கள் விரும்பியவர்களிற்கு வாக்களிக்கும்படியும் முடிவெடுக்கப்பட்டது.

இதன்போது சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியான பின்னர் மீண்டும் கூடி, இறுதி நிலைப்பாடு எடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோத்தாவுக்கு எதிரான விசாரணை தொடங்கியது

G. Pragas

வவுனியாவில் திலீபனின் நினைவேந்தல்!

G. Pragas

புலிகள் அழிந்த நாள்! எனது வாழ்க்கையின் முக்கிய நாள்! – முரளி

G. Pragas

Leave a Comment