செய்திகள் யாழ்ப்பாணம்

தம்பதியை கட்டிவைத்து துணிகரக் கொள்ளை!

யாழ்ப்பாணம் – கந்தரோடை ஆலடியில் வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்து விட்டு 7 அரைப் பவுண் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (23) இடம்பெற்றுள்ளது.

வீட்டில் வயோதிபத் தம்பதி ஒன்று வசித்து வரும் நிலையில் கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவர்கள் இருவரையும் மிரட்டி கட்டிவைத்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Related posts

திருகோணமலை தேர்தல் மாவட்டம் – சஜித் வெற்றி

G. Pragas

சிறுப்பிட்டி விபத்தில் ஒருவர் பலி! சாரதி கைது!

G. Pragas

வான் விபத்து-ஒருவர் பலி

reka sivalingam